சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஸ்மார்ட் நூலகத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருக்கிணைப்புக்குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தமது கவனத்திற்கு கொண்டுவந்தமைக்கு இணங்க இந்த நடவடிக்கையை முன்னெடுத்ததாக நீதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்
குறித்த ஸ்மார்ட் நூலக பெயர் பலகையானது ஆங்கிலம் சிங்களம் மற்றும் சீன மொழிகளில் பொறிக்கப்பட்டிருந்த நிலையில் புதிய பெயர் பலகை விரைவில் குறித்த இடத்தில் காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பெருந்தோட்ட துறைக்கான பிரதமரின் இணைப்புச்செயலாளர் செந்தில் தொண்டமானும் குறித்த விடயம் தொடர்பில் தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.
அத்துடன், தமிழ் மொழிக்கான அங்கீகாரம் தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.