வவுனியா இளைஞர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைவு

வன்னியை மையப்படுத்தி அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த அகில இலங்கை இளைஞர் முன்னணி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடு இன்று (10.01.2023) இணைந்து கொண்டது.

இதன்போது, கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட கிரிதரன், இராசையா விக்டர் ராஜ், பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோடு இணைந்து கொண்டனர்.