கமத்தொழில் இராஜாங்க அமைச்சின் ஊடாக “குழந்தைகளுக்கான மரத்தோட்டம் தேசிய மரநடுகை செயற்திட்டம்-2021” (ககுலிதுரு உதான) இன் கீழ் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் தரம் ஒன்று புது முக மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் நடைபெற்றுவருகிறது.அந்தவகையில் யாழ், நல்லூர் தொகுதியை உள்ளடக்கிய யாழ் நல்லூர் சென் பெனடிக் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை,சென்.ஜோன் பொஸ்கோ வித்தியாலயம்,யாழ் இந்து ஆரம்ப பாடசாலை ஆகிய பாடசாலைகளில் இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் யாழ் மாநகரசபை கௌரவ உறுப்பினர் சாந்தரூபன் அவர்களும் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் பிரதிநிதிகளும், பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.