ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 70வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, அங்கஜன் இராமநாதன் இளைஞர் அணியின் ஏற்பாட்டில், கொவிட் 19 பேரிடர் கால இரத்த தான நிகழ்வு இன்று (31.08.2021) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் பிரத்தியேக செயலாளர் குலேந்திரன் சிவராம் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.Covid 19 சுகாதார வழிமுறைகளை பின்பற்றி ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கட்சியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் பாலசிங்கம் சாந்தரூபன், யாழ், நல்லூர் தொகுதி இணைப்பாளர்கள் சத்தியபவன் மற்றும் பிரதாப், இளைஞர்கள், பெண்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை, நாட்டுக்கு பலம் சேர்க்க ஒன்றாய் இணைவோம் – மனித வாழ்வுக்கு உயிர் கொடுப்போம் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டு முன்னெடுக்கப்படும் இரத்த தான நிகழ்வுகளின் யாழ் மாவட்ட நிகழ்வுகள், தொடர்ச்சியாக எதிர்வரும் செப்டெம்பர் 02ம் திகதி வரை யாழின் பல்வேறு இடங்களில் இடம்பெறவுள்ளன.யாழ்ப்பாணம் இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள இரத்த தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு, கொவிட் 19 பேரிடர் கால நடமாடும் இரத்த தான நிகழ்வுகளாக இவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.அதன்படி, 01.09.2021 – சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி – 08.30Am01.09.2021 – மல்லாகம் மகா வித்தியாலயம் – 08.30Am02.09.2021 – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அலுவலகம், சாவகச்சேரி – 08.30Am
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 70வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, அங்கஜன் இராமநாதன் இளைஞர் அணியின் ஏற்பாட்டில், கொவிட் 19 பேரிடர் கால இரத்த தான நிகழ்வு இன்று (31.08.2021) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
- by admin