யாழ்ப்பாணம் தெல்லிப்பளை வைத்தியசாலையின் கோவிட்-19 சிகிச்சைப் பிரிவிற்கு குளிசாதனப் பெட்டியொன்று இல்லாமை தொடர்பில் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டமையை தொடர்ந்து புதிய குளிர்சாதனப் பெட்டியொன்று கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் அலுவலகத்தினால் கோவிட்19 சிகிச்சை பிரிவுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

கலாநிதி ராகவன் அவர்களின் இணைப்புச் செயலாளர் க.செவ்வேள் இந்தக் குளிர்சாதனப் பெட்டியினை வைத்தியசாலை உத்தியோகத்தர்களிடம் இன்று (02) காலை கையளித்தார்.