18 நாட்கள்
216 மணித்தியாலங்கள்
3023 கிலோ மீற்றர்கள்
15 பிரதேச செயலக பிரிவுகள்
435 கிராம சேவையாளர் பிரிவுகள்
1305 மில்லியன் நிதி ஒதுக்கீடு
2000+ வேலைத்திட்டங்கள்
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத்திட்டத்திற்கமைவாக, கௌரவ பிரதமர் அவர்களின் வழிகாட்டுதலில், நிதியமைச்சர் மற்றும் ஜனாதிபதி செயலணியின் தலைவர் கௌரவ பசில் ராஜபக்ஷ அவர்களினால், இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவிற்கும் 03 மில்லியன் ரூபா அபிவிருத்திக்காக ஒதுக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் யாழ் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் உள்ள மக்களின் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் இனங்கண்டு நிலைபேறான அபிவிருத்தியினை மேற்கொள்வதற்காக, பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களால் கிராமங்கள் தோறும் விசேட சந்திப்புகள் இடம்பெற்றன.
28.09.2021 அன்று ஆரம்பித்த இச்சந்திப்புகள், மக்களின் வாழ்வாதார விருத்திக்கான தேவைகளை இனங்காண வைத்தது.
ஒவ்வொரு கிராமங்களுக்கும் ஒவ்வொருவகையான தேவைகள் உள்ளன. ஒவ்வொரு கிராமமும் தமக்கான அபிவிருத்தியை தாமே தெரிவுசெய்ய இச்சந்திப்புகள் வாய்ப்பை வழங்கியிருந்தன.
ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு வாழ்வாதார தொழில்துறையை உருவாக்குவதை முக்கிய இலக்காக கொண்டு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதற்கான ஆரம்பம் இச்சந்திப்புகளால் சாத்தியமாகியுள்ளது.
தேர்தல்கால பயணங்களை விட தேர்தலுக்கு பின்னதான, மக்களின் தேவைகள் அறியும் இப்பயணம் மனதுக்கு நெருக்கமானதும் நிறைவானதுமாகும்.
இப்பயணத்தில் இணைந்துகொண்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், கிராமிய பிரதிநிதிகள், பிரதேச இணைப்பாளர்கள், சமயத்தலைவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகள்.
இது “மக்களின் தேவைகள் அறியும் பயணம்…”