முல்லைத்தீவு மாவட்டம் தேராவிலில் அமைந்துள்ள விவசாயப் பண்ணைக்கு இன்று (10) முற்பகல் விஜயம் மேற்கொண்ட கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் விவசாயப் பண்ணையின் தற்போதைய நிலைமைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

வட மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் பணியாற்றிய சந்தர்ப்பத்தில் இராணுவத்தினரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக இராணுவத்தினர் பராமரித்த 120 ஏக்கர் விஸ்தீரணமுள்ள இவ்விவசாயப் பண்ணையினை 2019 ஏப்ரல் மாதம் அவர்கள் ஆளுநரிடம் கையளித்ததுடன் ஆளுநர் அதனை வட மாகாண விவசாய அமைச்சினூடாக விவசாயத் திணைக்களத்திடம் கையளித்திருந்தார்.