நாடளாவிய சௌபாக்கியா உற்பத்தி கிராமம் வறுமை ஒழிப்பு திட்டமானது மண்கும்பானில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு குறித்த திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
முருங்கை அறுவடை மற்றும் அதனுடன் இணைந்த உற்பத்திச் செயற்பாடுகளுக்கான சௌபாக்கியா உற்பத்திக் கிராமமாக மண்கும்பான் விளங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது