பெருந்தோட்டத்துறை அமைச்சு மற்றும் தென்னை கித்துல் பனை செய்கை மேம்பாடு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி, ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் வீட்டுக்கு வீடு கப்ருக (கற்பகம்) – 40 இலட்சம் தென்னங் கன்றுகள் நாட்டும் செயற்திட்டத்தின் முல்லைத்தீவு மாவட்ட இரண்டாவது தென்னங்கன்றுகள் வழங்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்று (10) முற்பகல் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் அலுவலகத்திலும் துணுக்காய் பிரதேச செயலக பிரிவிலுள்ள ஐயங்குளம் கிராமத்திலும் இடம்பெற்றது.

இதன்போது மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட பொதுமக்களுக்கு 1000 தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.இந்த நிகழ்வில் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி என்.ரஞ்சனா, மாவட்ட விளையாட்டு திணைக்கள உதவிப்பணிப்பாளர், தென்னை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களின் அலுவலக பணிக்குழாமினர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகளை சம்பிரதாயபூர்வமாக வழங்கிவைத்தனர்.