பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் அழைப்பையேற்று இன்று யாழ்ப்பாணம் வருகைதந்த இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச யாழில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை நேரில் பார்வையிட்டார்.அவ்விஜயத்தின் ஒரு பகுதியாக, வலி வடக்கில் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் வாழ்ந்துவரும் காணியற்ற மக்களுக்காக உருவாக்கப்படும் வீட்டுத்திட்டத்தின் பணிகளை பார்வையிட்டார்.இத்திட்டத்தின் ஊடாக சுமார் 30 குடும்பங்கள் பயனடையவுள்ளதுடன், அம்மக்களுக்கான காணி, வீடு, மற்றும் அடிப்படை வசதிகளை அரசாங்கம் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இவ்விஜயத்தின் போது மக்களால் முன்வைக்கப்பட்ட மலசலகூடங்களை அமைத்தல், உள்ளக வீதி அமைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை கவனத்தில் கொள்வதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.அத்துடன், இத்திட்டத்தை முன்மொழிந்து, தமக்கு காணி மற்றும் வீடு உள்ளிட்ட வாழ்வாதாரத்தை பெற்றுத்தந்தமைக்கான நன்றியை அங்கஜன் இராமநாதன் அவர்களுக்கு அம்மக்கள் தெரிவித்தனர்.தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், கௌரவ அமைச்சரின் வருகையை முன்னிட்டு எவ்வித விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படவில்லை.கொவிட் 19 தொற்று நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாடளாவிய ரீதியிலான அபிவிருத்தி செயற்பாடுகளை அரசாங்கம் தடையின்றி முன்னெடுத்து வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தெல்லிப்பளை வறுத்தலைவிளான் பகுதியில் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்துக்கான ஆரம்ப கட்ட செயற்பாடுகளை அமைச்சர் நாமல் ராஜபக்ச இன்று பார்வையிட்டார்.
- by admin