சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு வீரமங்கை..!

பாகிஸ்தானில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் இலங்கை சார்பில் பங்குகொண்ட முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்துவரும் இவர் தனது திறமைமீது கொண்ட நம்பிக்கையை உரமாக்கி இன்று இச்சாதனையை படைத்து நாட்டுக்கும் முல்லைத்தீவு மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.பாகிஸ்தான் லாகூரில் இடம்பெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில், 25வயதுக்குட்பட்ட 50_55 கிலோகிராம் எடைப்பிரிவுப் போட்டியில் வென்று தங்கப்பதக்கம் வென்றுள்ள எங்கள் வீரமங்கை கணேஷ் இந்துகாதேவிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.