இலங்கையில் காணாமல் போனோர் பிரச்சினை தொடர்பில், உண்மையை கண்டறில் மற்றும் நல்லிணக்க பொறிமுறையொன்றின் மாதிரியொன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவரும் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள், நல்லிணக்கம் மற்றும் கற்றுக்கொண்ட பாடங்கள் தொடர்பில் ருவண்டா அரசின் பிரதிநிதிகள் மற்றும் துறைசார் வல்லுனர்களின் ஆலோசனையையும் உதவியையும் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது கருத்துத் தெரிவித்த ருவண்டாவின் துணைத்தூதுவர் Cally Alles அவர்கள், இந்த முயற்சியை வரவேற்றதுடன் ருவண்டா அரசின் சார்பில் உதவிகளையும் ஆலோசனைகளும் தேவையான சந்தர்ப்பத்தில் வழங்குவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளமுடியுமெனவும் குறிப்பிட்டார்.
இந்தச் மெய்நிகர் சந்திப்பில் வண.கரவிலக்கொட்டுவ தம்மதிலக தேரரும் இணைந்து கொண்டிருந்தார்.